அரசுப் பணியாளர்கள் மிஸ்டர் பொது ஜனத்தின் சேவகன் என்றுதான்
அரசு சொல்கிறது இந்த அப்பாவி பொது ஜனத்தின் வரியில் தான் அத்தனை அரசு ஊழியர்களும் வயிறு வளர்க்கிறார்கள் என்பது ஒருபுறம் என்றலும் அவர்கள் வதைப்பதும் இந்த பொது ஜனங்களைதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஜனவரி மாதம் 9 ம் தேதி இரவு 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து பழனிக்கு அரசுப் பேருந்து ஒன்று கிளம்பியது. அந்தப் பேருந்து கியம்புவதற்கு முன்னர் வழக்கம்போல அந்தப் பேருந்தின் நடத்துனன் திருநெல்வேலி மதுரை என்று கூவிக் கொண்டிருந்தான். அணைத்து இருக்கைகளும் நிறைந்ததும் பேருந்து கிளம்பியது. அப்போது நடுத்தர வயதுடைய பொது ஜனம் கையில் குழந்தையோடு காலியாக இருந்தா இருக்கையில் அமர்ந்தார். அவரிடம் எங்கே போக வேண்டும் என்று கேட்ட அந்த நடத்துனன் அந்த பொது ஜனம் வள்ளியூர் என்றதும் எல உனக்கு எல்லாம் அறிவு கிடையாதா இது பழனி போற பஸ் இதுல வள்ளியூர் போறதுக்கு ஏறி இருக்க அதுலயும் சீட் ல உக்காந்திருக்க உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா என்று ஏக வசனத்தில் திட்டியதுடன் அவரை வலுக்கட்டாயமாக எழுப்பி விட்டதுடன் தொடர்ந்து தே மகனே என்றெல்ல்லாம் திட்ட ஆரம்பித்தான். இதைக் கண்டும் கேட்டும் வழக்கம்போல் பிற பயணிகள் அமைதி காக்க ஒருவர் மட்டும் அந்த நடத்துனனிடம் பயணிகளிடம் கொஞ்சம் மரியாதையாக நடக்கலாமே என்று கேட்டதும் அந்த நடத்துனனின் நண்பர்கள் சிலர் இவரிடமும் எகிற வேறு வழி இல்லாமல் இவரும் அமைதியாகிவிட அந்த அப்பாவி பொது ஜனம் அந்தப் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அதன் பின்னர் வள்ளியூர் வந்ததும் இரண்டு நிமிடங்கள் நின்றே அந்தப் பேருந்து சென்றது.
யாரிடம் சொல்ல
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் அது சரி இவர்கள் மந்திரிகள் ஆவதெப்போ?
Sunday, January 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment