நர்சரியில் நாற்றுகளை நடுவதற்கு முன் ...
அது ஒரு அழகான காலை வேளை. வானம் மப்பும் மந்தாரமுமாக மழையை அனுப்பலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருந்துது அதே நேரம் நான் மட்டும் இளைச்சவனா ன்னு சூரியனும் தன்னோட வேலையை தெளிவாக செய்ய ஆரம்பிசிருந்தது. அந்த நேரம் எங்க வீட்டு ப்ரைம் மினிஸ்டர் அதான் என்னோட பொண்ணு எங்க வீட்டு கட்சி தலைவி (சதி அதாங்க என்னோட மனைவி) கிட்ட போயி வெளியில விளையாட போட்டுமான்னு ரொம்ப பணிவுடன்? அனுமதி கேட்க என்னோட சதி (மனைவிக்கு என்ன ஒரு அழகான பேரு தமிழ் ல ) வெளியில விளையாட விட வேண்டாங்கறதுக்காக அம்மாவுக்கே உரிய அக்கறையோட இல்லம்மா இப்ப மழை வர்ற மாதிரி இருக்கு சாயங்காலம் விளையாட போலாம் என சொல்ல வழக்கு என்னிடம் வந்தது நானும் அம்மா சொல்ற மாதிரி கேளும்மா என கையை விரிக்க (நமக்கு மனைவி சொல்லே மந்திரம் ) என்னோட மகளும் சோகமா முகத்த வெச்சுட்டு போயிட்டா. அப்புறம் சாயங்காலம் ஒரு 5 மணி இருக்கும் திரும்பவும் என் பொண்ணு வந்து அம்மா வெளியில மழை பெய்யுதான்னு கேக்க இல்லன்னு என் மனைவியும் சொல்ல அடுத்த செகண்டே அப்ப நான் இப்ப வெளியில விளையாட போலாமான்னு கேக்க இப்ப பதிலே சொல்ல முடியல .
இதை நான் ஏன் சொன்னேன்னா இப்படி நம்ம வாயை அடிக்கிற மாதிரி நம்ம குழந்தைங்க பதில் சொல்லும்போது பூரிச்சு போற நாம அதுங்கள ஸ்க்கூல்ல கொண்டு போயி விடுறதுக்கு முன்னாடி அவங்க ஸ்க்கூல்ல எப்படி நடந்துக்கணும்னு நாம சொல்லி கொடுகிறோமான்னு கேட்ட பெரும்பாலும் இல்லன்னுதான் சொல்வோம். அவுங்க ஸ்க்கூல்ல எப்படி நடந்துக்கணும்னு சின்ன சினந்தான் சில பயிற்சிகளை நாம கொடுத்தோமுன்னா அவுங்களும் ஸ்க்கூல்ல கிளாஸ்க்கு வெளியில நிக்கிற பசங்கள இல்லாம அவுட் ஸ்டான்டிங் ஸ்டுடன்சா இருப்பாங்க தானே
- குழந்தைங்கள ரொம்ப செல்லம் கொஞ்சாம தங்களோட சாப்பாட்டை தாங்களாகவே சாப்பிட சொல்றது. ஏன்னா ஸ்க்கூல்ல சாப்பாடை யாரும் ஊட்டி விட மாட்டாங்க
- கழிப்பறையை எப்படி பயன்படுத்துறது, உள்ளாடைகளை எப்படி சரியாய் பயன்படுத்துறது
- சக மாணவர்கள் கிட்ட எப்படி நடந்துக்கிறது. சரியான பகிர்வு விட்டு கொடுக்கிறது .
- யாராவது எந்த உதவியாவது செஞ்சா அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்றது
- என்னென்ன பொருள் கொண்டு போறோமோ அந்த பொருட்கள மறக்காம திரும்ப கொண்டு வர்றது
- எவ்வளவு நல்ல பொருளா இருந்தாலும் அடுததவங்க பொருள் மேல ஆசைப்படாம இருக்கிறது
- வீட்ல பெத்தவங்கள ஒருமையில கூப்பிட்டே பழகி இருப்பாங்க அதே பழக்கம் பள்ளியில டீச்சர் கிட்ட வந்த எல்ல டீச்சர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டங்க அதனால அவுகளை மரியாதையா கூப்பிட சொல்லி கொடுக்கிறது
- ஸ்க்கூல்ல வீட்டுக்கு போறதுக்கு பெல் அடிச்சதுமே அடிச்சு பிடிச்சு வெளியில ஓடாம நிதானமா வெளியில வர்றதுக்கு சொல்லி தர்றது ரொம்ப முக்கியம். ஏன்னா கும்பகோணம் பள்ளி தீ விபத்துல நிறைய குழந்தைங்க நெரிசல்ல மாட்டிகிட்டதுனலாத்தான் அந்த பிஞ்சுகள் கருகி போச்சு.
திருநெல்வேலி

No comments:
Post a Comment