தீபாவளிக்கு சூர்யா ரசிகர்களுக்கு விருந்து ஆதவன். சூர்யா தன்னை ஒரு கமர்சியல் ஹீரோ ன்னு காட்டியிருக்கிற படம். வழக்கமான சூர்யா படம் இல்லாம கமர்சியலுக்கும் தன்னால பிட் ஆக முடியும்னு நிருபிச்சிருக்கார். தன்னை
மக்கள் தலைவன்னு காமிக்க ஆசை படுற அத்தனை ஹீரோக்களும் பண்றது பஞ்ச் டயலாக் பேசுறது. இதுவரைக்கும் சூர்யா படத்துல இப்படிப்பட்ட அபத்தங்கள் எதுவும் இல்லாம இருந்துச்சு. ஆதவன் படம் ஒபநிங்க்ல சாயாஜி ஷிண்டே நம்மள அழிக்க இன்னொருத்தன் பொறந்துதான் வரணும் அப்படின்னு சொன்னதுமே சூர்யா பாட்டோட பைக்கோட பட்டைய கிளப்பிட்டு வர்றாரு - நல்லதானே இருந்தீங்க சூர்யா உங்களுக்குமா இந்த நோய்.
ஒரு வரி கதைதான். குழந்தைகளோட உறுப்புகளை திருடி வெளிநாட்டுக்கு விக்கிற ஒரு கும்பலை விசாரிக்க வர்ற நீதிபதியை கொல்லனும். கூலிபடையை சேர்ந்த கொலையாளியா வர்றாரு சூர்யா. முதல் குறில நீதிபதி தப்ப கதை சூடு பிடிக்குது.
நீதிபதி பிரஸ் மீட் வைக்க அங்க கூடியிருக்கிற பதிரிக்கையாளர்கள்ள ஒரு தமிழ் நிருபர் மட்டுமே அபத்தமா கேள்வி கேக்குற மாதிரி சொல்லியிருக்காரு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். அட ஏன் சார் உங்களுக்கு இந்த புத்தி. நீதிபதி அது யார்யா அது தமிழ்ல ஒருத்தன் கேள்வி கேட்டானே அப்படின்னு கேக்கறதும் தமிழில் பேசினா தமிழனா இருந்தா இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு.
அதுக்கப்புறம் நீதிபதிய சூர்யா கொலை செஞ்சாரா இல்லையாங்கறதுதான் கதை. ஒரு வரி கதையை இளுளுளுளுத்து ஆனா அழகா சொல்லியிருக்காங்க. படம் முழுக்க வர்ற வடிவேலு தீபாவளி வெடி வேலுவா சிரிக்க வெச்சிருக்காரு. படம் முழுக்க அவரோட நகைச்சுவை சிரிக்க வைக்குது. சபாஷ் வடிவேல்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் சரோஜா தேவி நடிச்சுருக்காங்க. நயன்தாரா படத்துல வந்துட்டு போறாங்க. நயன்தாரா அறிமுகமாகிற இடத்துல சரோஜா தேவி அழகா ஒரு வசனம் சொல்றாங்க. நீ அடுத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும் அடுத்தவங்கள கெடுக்கிற மாதிரி இருக்க கூடாது அது ஏதோ பிரபுத்துவமான வார்த்தையா தெரியுது.
பத்து வயசு பையனா சூர்யாவை உலா வர வெச்சிருக்காங்க. நல்லாத்தான் இருக்கு
கணேசின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி
டான் மேக்ஸ் -ன் எடிட்டிங் பார்க்க வைக்கிறது
மொத்தத்தில் நிறம் மனம் குணம் காரம் நிறைந்ததவன் ஆதவன்
Monday, October 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)


2 comments:
என்னதான் சொல்ல வர்றீங்க? பார்க்கலாமா? வேண்டாமா?
எல்லாம் ok . comment positng ல அந்த word verification வேண்டாமே?
Post a Comment