Saturday, October 3, 2009

கண்ணில் கண்ட நிகழ்வு

சுடும் நிலா

சில நிகழ்வுகளை சுட்டும் நிலா இது
கண்ணில் கண்ட சில சம்பவங்களை உங்களோடு பகிர வருதிறது இந்த நிலா

திருநெல்வேலி ஒரு அழகான ஊர். எல்ல இடத்துலயும் இப்ப இருக்கிற பிரச்சினைகள் மாதிரி இந்த ஊரும் பார்கிங் பிரச்சினைய தினமும் சந்திசுட்டுதான் இருக்கு. இதுல என்ன விஷயம் இருக்குன்னா இப்ப நெல்லையோட இதயப் பகுதிய இருக்கிற வண்ணார் பேட்டை சிக்னல் ல இப்ப மேம்பாலம் கட்டுறாங்க அதனால போலீசுக்கு போக்குவரத்தை ஒழுங்கு படுத்துறது பெரிய பிரச்சனையா இருக்கும். இதுல பெண் போலீசும் ஈடுபடுறாங்க
காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் அந்த வேகாத வெயில்ல நின்னு வேலை செய்றதுங்கறது சாதாரணம் இல்ல. நாம கொஞ்ச நேரம் வெயில்ல போயிட்டு வந்தாலே தலை எல்லாம் வலிக்கும் கோபம் பொத்திட்டு வரும்
ஆனா இந்த இடத்துல பாஸ்கர் அப்படின்னு ஒரு காவல் துறை அதிகாரி நின்னுகிட்டு ஒரு மைக் கையில வெச்சுட்டு வர்ற போற வாகனங்கள அவ்வளவு சீரா ஒழுங்கு படுத்துற அழகு இருக்கே அடேங்கப்பா ரொம்ப பொறுமையா டிராபிக் ரூல்ஸ் யும் சொல்லி ஒவ்வொருவரையும் மரியாதைய சொல்ற விதமே சூப்பர் ஆ இருக்கு ஆனா அதே நேரம் ஜங்ஷன் ரயில் வே ரோடு ல போக்குவரத்த ஒழுங்கு படுத்துற போலீஸ் காரங்க ஏதோ வண்டி ஓட்ற டிரைவர் எல்லாருமே அவங்க வீட்டுக்கு டி காபி அப்புறம் மீன் வாங்கி கொடுக்ரவங்க மாதிரி அந்த வண்டிய ஏடு இந்த வண்டிய எதுன்னு சொல்றது கொஞ்சம் அசிங்கமா இருக்கு நட்ட நாடு வெயில்ல நின்னுகிட்டு மரியாதையா சொல்ற அதிகாரியும் இங்கதான் இருக்காரு மரியாத அப்படின்னா என்னனு கேக்குற அசிங்கமான போலிசும் ஒரே இடத்துல
என்ன கொடுமை சார் இது

அன்புடன்
ராஜ சேகர்

No comments: